முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு: பயணிகள் குளிக்கத் தடை

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், கர்நாடக மாநிலத்தின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன.  அவற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப் படுகின்றது. கடந்த 18ஆம் தேதி பிலிகுண்டுலுவை இந்த நீர் வந்தடைந்தது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:57 AM
பகிர்:

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், கர்நாடக மாநிலத்தின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன.  அவற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப் படுகின்றது. கடந்த 18ஆம் தேதி பிலிகுண்டுலுவை இந்த நீர் வந்தடைந்தது.

துவக்கத்தில் நீர் வரத்து 22 ஆயிரம் கன அடியாக இருந்தது. இது திங்கள் கிழமை மாலை குறைந்து 12 ஆயிரம் கன அடியாக இருந்தது. .இந்நிலையில், திங்கள் நேற்று இரவு பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது. 

செவ்வாய் காலை நிலவரப்படி நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியாக இருந்தது.

பிரதான அருவி சினி அருவி மினி அருவி ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்துக்  கொட்டுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி 5ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →