முகப்பு
தற்போதைய செய்திகள்

வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி சிதம்பரத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:57 AM
பகிர்:

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநில துணைப் பொதுச்செயலாளர் கு.திருஞானம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் முரகன் வரவேற்றார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, கார்த்தி, பழனிசாமி, வேலு, பால்ஸ் ரவிக்குமார், விஜயக்குமார், பாஸ்கர், சிவக்குமார், செள.ராஜா, சந்தானக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தேவதாஸ் படையாண்டவர் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன், மாவட்டத் தலைவர் பூக்கடை கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் கலையரசன், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வமகேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். நகரத் தலைவர் பி.கே.அருள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.