ஒகேனக்கல்லில் நீர் வரத்து 32 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடக நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணத்தால் அங்குள்ள அணைகள் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.அவ்வாறு திறந்து விடப்பட்ட
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு வியாழக்கிழமை நீர் வரத்து 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணத்தால் அங்குள்ள அணைகள் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.அவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 18-ஆம் தேதி தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
இந்த நீர் ஒகேனக்கல் அருவியில் காவிரியின் இரு கரைகளை தொட்டப்படி ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும், ஜந்தருவி, பிரதான அருவி, சினி அருவி, மினி அருவி உள்ளிட்ட ஒகேனக்கல் அருவி முழுவதும் புது வெள்ளம் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதில் வியாழக்கிழமை ஒகேனக்கல் அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
அருவியில் கூடுதலாக தண்ணீர் வருவதால் பாதுகாப்பு கருதி 7-ஆவது நாளாக பயணிகள் குளிக்கவும், பரிசல் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியின் அக்கறைக்கு பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில் பிரதான நீர் வீழ்ச்சி அருகே உள்ள தொங்கு பாலம் பூட்டு போடப்பட்டுள்ளது. மேலும், அருவியின் முக்கிய இடங்களில் போலீஸôஸார், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர, காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து தண்டோரா, ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.