முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமின் நேர்முகத் தேர்வில் இருபாலரும் திரளாக கலந்து கொண்டனர்.

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:28 AM

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமின் நேர்முகத் தேர்வில் இருபாலரும் திரளாக கலந்து கொண்டனர்.

விருதுநகர் அருகே சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் பங்கேற்பதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குவிந்தனர். இதில், 5 பிரசித்த பெற்ற தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற முகாமை வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

Advertisement

இதில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களது நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தகுதியின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு மூலம் உடனடியாக தேர்வு செய்தனர். இன்றைய தினத்தில் நடந்த முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.