புதுக்கோட்டை பேரறிஞர் அண்ணாவின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு முரசொலி அறக்கட்டளை நடத்தும் பாவேந்தர் பாரதிதாசனார் பாடல் ஓப்பிக்கும் போட்டி நாளை நடைபெறவுள்ளது
இதில் பள்ளிமாணவர்களுக்கு பாரதிதாசனார் பாடல்களில் என்னருந் தமிழ்நாட்டின் கண் எனத்தொடங்கி ஆரிதைப்பகவார் இங்கே என முடியும் வரை உள்ள பாடல்கள் 24 வரிகள் அல்லது பாரதிதாசனார் பாடல்களில் வலியோர் சிலர் எளியோர் தமை எனத்தொடங்கி இனிமேலிலை எனவே முரசறைவாய் முரசறைவாய் என முடியும் வரை உள்ள பாடல்கள் 32வரிகள் ஏதேனும் ஓரு பாடல் மட்டும் கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு பாரதிரதாசன் பாடல்களில் பொதிகைமலை விட்டெழுந்து சந்தனத்தின் எனத்தொடங்கி பாழாக்கினாலும் அதில் கவலை கொள்ளேன் என முடியும் வரை உள்ள பாடல்கள் 24 வரிகள் அல்லது பாரதிரதாசன் பாடல்களில் பூட்டிய இரும்பிக்கூட்டின் கதவு எனத்தொடங்கி வாழ்க நின் வையத்து மாப்புகழ் நன்றே என முடியும் வரை உள்ள பாடல்கள் 27வரிகள் ஆகிய தலைப்புகளில் நடைபெறும் முதல்சுற்றில் முதல்பரிசாக ரூ.5.000 இரண்டாம் பரிசாக ரூ.3.000 மூன்றாம் பரிசாக ரூ.2.000 ஆறுதல் பரிசு ரூ.1.500 மாநில அளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் முதல்பரிசு ரூ.15.000 இரண்டாம் பரிசு ரூ.10.000மூன்றாம் பரிசு ரூ.5.000 ஆறுதல் பரிசு தலா 2பேருக்கு ரூ.3.000வீதமும் சான்றிதழ்களும் வழங்கப்படும் போட்டி பள்ளி மாணவர்களுக்கு நாளை காலை 9மணிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.