பழனி ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை முதல் ஒரு மாதம் நிறுத்தம்
பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல பயன்பாட்டிலுள்ள ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை முதல் ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து பழனிக்கோயில் தரப்பில்
பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல பயன்பாட்டிலுள்ள ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை முதல் ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து பழனிக்கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தின் முதன்மைக்கோயிலான பழனியில் ரோப்கார் இயக்கம் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. ரோப்கார் இயக்கத்தில் பராமரிப்புப் பணிக்காக நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரமும், மாதம் ஒருமுறை ஒரு நாளும் இயக்கம் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக ரோப்கார் இயக்கம் நாளை (ஜீலை.28) முதல் ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் நாச்சிமுத்து கூறுகையில், இந்த நாட்களில் மலைக்கோயில் மேல்தளத்திலுள்ள ரோப்கார் நிலையம், கீழ்த்தளம் ஆகியவற்றில் மராமத்துப் பணிகளும், எலக்ட்ரிக்கல், ஜெனரேட்டர் பணிகளும், ரோப்கார் பெட்டிகள் சீரமைத்து பொலிவு செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. தவிர சுமார் 300அடி உயரத்தில் உள்ள டவரில் பேரிங்குகள், ரப்பர் சக்கரங்கள் ஆகியவை கழற்றப்பட்டு மாற்றப்பட வேண்டியவை மாற்றி கவுண்ட்டர் வெயிட் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.