மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அருகேயுள்ள மேலச்சின்னனம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது குழந்தை கிருத்திக் (2). வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திறந்து கிடந்த செப்டிக் டேங்கில் விழுந்தது. இது தெரிய வந்ததும் செப்டிக் டேங்கில் இறங்கி குழந்தையை வெளியே தூக்கினர். குழந்தையின் உடல் நிலை மோசமாக இருந்தது. உடனே குழந்தையை சிகிச்சைக்காக அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.