ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஆம்பூர் அருகே சாலை விபத்தில் சாவு
அகரம்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் (59). இவர் சம்பவத்தன்று வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காளப்புத்தூர் கிராமத்தருகே
ஆம்பூர் அருகே ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
அகரம்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் (59). இவர் சம்பவத்தன்று வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காளப்புத்தூர் கிராமத்தருகே தன்னுடைய மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. அதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பள்ளிகொண்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.