முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுவிலக்கு குற்றவாளிகள்  ஊரைவிட்டு நீதிமன்றம் மூலம் வெளியேற்றம்; ஏ.டி.டி.ஜி.பி., தகவல்.

ஜூன் 2:2013-2014ல் மதுவிலக்கு குற்றவாளிகள் கோர்ட் மூலம் 199 பேர் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். என, தமிழ்நாடு மதுவிலக்கு காவல் துறை கூடுதல் இயக்குனர்(ஏ.டி.டி.ஜி.பி.,) காந்திராஜன் தெரிவித்துள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:29 AM
பகிர்:

ஜூன் 2:2013-2014ல் மதுவிலக்கு குற்றவாளிகள் கோர்ட் மூலம் 199 பேர் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். என, தமிழ்நாடு மதுவிலக்கு காவல் துறை கூடுதல் இயக்குனர்(ஏ.டி.டி.ஜி.பி.,) காந்திராஜன் தெரிவித்துள்ளார்.

       முன்னதாக, பழநி மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனில்  அவரது தலைமையில்,  மதுவிலக்கு சம்மந்தமான ஆய்வுக்கூட்டம் நடந்தது. பின்னர் காந்திராஜன் கூறியதாவது; மாநிலம் முழுவதும், 2013ம் ஆண்டில், மாவட்ட காவல் துறையினர் மதுவிலக்கு காவல் ஆளினர் மற்றும் புலனாய்வு பிரிவினர், கூட்டாக நடத்திய வேட்டையில், 89,169 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்குகளில் 1893 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2,41,93,950க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அரசு கருவூலத்தல் செலுத்தப்பட்டுள்ளது.  இந்தாண்டு ஏப்ரல் வரையில், மதுவிலக்கு புலனாய்வு பிரிவினர் கூட்டாக நடத்திய வேட்டையில், 36,878 வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்த ரூ.96 லட்சம் மதிப்புள்ள கள்ளச்சாராயம், ரூ.23 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டுள்ளது. 5 மாதங்களில் ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுவிலக்கு குற்றவாளிகள் கோர்ட் மூலம் 199 பேர் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கும், அனைத்து காவல் சோதனை சாவடிகளில், தீவிர வாகன தணிக்கை செய்யப்படும். இதன் மூலம், கேரளா, கர்நாடகாவிலிருந்து எரிசாராயம், போலிமதுபான பாட்டில்கள், மதுபான பாட்டில் கடத்தல் முழுமையாக தடுக்கப்படும். கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனத்தெரிவித்துள்ளார்.

ஆய்வு கூட்டத்தில், சேலம் மதுவிலக்கு அமலாக்கம் எஸ்.பி., சுப்புலட்சுமி, திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி., பாத்திமா தேவி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.