ஸ்ரீ நடராஜர் கோயிலுக்கு ரூ.10 லட்சம் செலவில் வெள்ளி ருத்ராபிஷேக பீடம் வழங்கிய பக்தர்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு மகாபலிபுரத்தைச் சேர்ந்த பக்தர் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் செலவில் பித்தளை மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட ருத்ராபிஷேக பீடத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு மகாபலிபுரத்தைச் சேர்ந்த பக்தர் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் செலவில் பித்தளை மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட ருத்ராபிஷேக பீடத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தினமும் காலையில் காலசந்தி (காலை சுமார் 7.30-9.00) நேரத்தில் கலசங்கள் வைத்து பூஜை செய்து ஹோமம் செய்து தான் பூஜைகள் தொடங்குவது வழக்கம். அனந்தாசனம், பத்மாசனம் என இரண்டு ஆசனங்களில் கலசங்கள் வைத்துதான் ஸ்ரீ நடராஜர், சிவகாமியை ஆவாஹனம் செய்து பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பூஜைக்காக மகாபலிபுரத்தைச் சேர்ந்த பக்தர் முனுசாமி-லலிதா குடும்பத்தினர் ரூ.10 லட்சம் செலவில் அழகுற வடிவமைத்து செய்துள்ள பித்தளை மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பீடத்தை கட்டளை தீக்ஷிதர் சோம நாக தீக்ஷிதர் மூலமாக, கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் பாஸ்கர தீட்சிதரிடம் புதன்கிழமை வழங்கினர். புதன்கிழமை முதல் அந்த பீடத்தில் பூஜைகள் செய்ய கோயிலுக்கு பீடம் அர்ப்பணம் செய்யப்பட்டது. மேலும் இந்தபீடம் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு ருத்ராபிஷேகம் செய்வதற்கும் பயன்படும் வண்ணம் செய்திருப்பது மேலும் சிறப்பாகும்.