முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி அருகே இரட்டைக் கொலை செய்து தலைமறைவான கார் டிரைவர் கைது: கடத்தப்பட்ட சிறுமியும் மீட்பு

பழனி அருகே பாலசமுத்திரம்-பாலாறு பொருந்தலாறு அணை பிரதான சாலையில் பண்ணை வீட்டில் வசிப்பவர் நாராயணசாமி நாயுடு மனைவி தனுஸ்வரி(36).  நாராயணசாமியின் இரண்டாவது மனைவியான

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:32 AM
பகிர்:

பழனி அருகே பெண்ணையும், உறவினரையும் கொலை செய்து விட்டு ரூ.23 இலட்சம் பணம், 13வயது மகளுடன் மாயமான கார் டிரைவர் பணம், சிறுமி காருடன் சிக்கினார்.

பழனி அருகே பாலசமுத்திரம்-பாலாறு பொருந்தலாறு அணை பிரதான சாலையில் பண்ணை வீட்டில் வசிப்பவர் நாராயணசாமி நாயுடு மனைவி தனுஸ்வரி(36).  நாராயணசாமியின் இரண்டாவது மனைவியான இவருக்கு 7ம் வகுப்பு படிக்கும் துளசி சியாமளா(13) என்ற மகள் உள்ளார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் நாராயணசாமி இறந்து விட்ட நிலையில் தோட்டம், வயல்களை பராமரித்து வந்த தனுஸ்வரி பழனி அருகே வி.கே.மில்ஸ் பகுதியில் தனியார் பிரைமரி பள்ளியை நடத்தி வந்துள்ளார். 

இவரது வீட்டின் கார் டிரைவர் காளீஸ்வரன்(28).  வெள்ளக்கோயிலை சேர்ந்த இவர் பாலசமுத்திரத்திலேயே வீடு பிடித்து தங்கியுள்ளார்.  தனுஸ்வரியின் உறவினர் வீரமணி மகன் செந்தில்குமார்(40).  இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 13 வருடங்களுக்கு முன்னரே மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனியே பைனான்ஸ் செய்து வருகிறார்.  கடந்த மார்ச்.22 ல் பள்ளியின் கட்டிட செலவுக்காக தனுஸ்வரியும், செல்வக்குமாரும் ரூ.23 இலட்சம் கடன் வாங்கி வீட்டில் வைத்திருந்த நிலையில் இருவரும் மார்ச்.23ம் தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். மேலும், வீட்டில் இருந்த பணம் ரூ.23 இலட்சம், கார் மற்றும் கார் டிரைவர் காளீஸ்வரன், சிறுமி துளசி சியாமளா ஆகியோர் காணாமல் போயிருந்தனர். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் எஸ்.பி., ஜெயச்சந்திரன் உத்திரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. 

இந்நிலையில் சனிக்கிழமை சென்னையில் மறைந்திருந்த காளீஸ்வரனும், துளசிசியாமளாவும் கோவைக்கு வந்த போது தனிப்படை போலீஸார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.  இதுகுறித்து திண்டுக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தெரிவித்ததாவது:-

மேற்படி டிரைவர் காளீஸ்வரன் குறைந்த சம்பளத்தில் தனுஸ்வரி வீட்டில் வேலை பார்த்துள்ளார். முன்பணமும் பெற்றுள்ளார். இந்நிலையில் முன்பணத்தை நீண்டகாலமாக வழங்காததால் காளீஸ்வரனை உரிமையாளர் பணம் தர நெருக்கியுள்ளனர்.இந்நிலையில் ரூ.23 இலட்சம் கடன் வாங்கிவந்ததை அறிந்து கொண்ட காளீஸ்வரன் சம்பவத்தன்று இருவரையும் கொலை செய்துவிட்டு கார், சிறுமி சியாமளா, பணத்துடன் தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் அழைப்பை வைத்து தனிப்படை பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல ஊர்களிலும் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் தப்பி வந்துவிட்டான்.  இந்நிலையில் சனிக்கிழமை சென்னைக்கு வந்து விட்டு ஊட்டியில் உள்ள சகோதரியை பார்க்க கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு சிறுமியுடன் வந்த போது தனிப்படை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்து விட்டனர். 

ஊட்டியில் பார்க் அருகே இருந்த கார்,காளீஸ்வரனிடம் இருந்து ரூ.17.5 லட்சம் பணம் ஆகியன மீட்கப்பட்டு காளீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமி உறவினர்கள் வசம் அல்லது காப்பகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார் எனத் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.