தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே அனுமதியின்றி கருந்திரி தயாரித்த 4 பேர் கைது

விருதுநகர் அருகே உள்ளது டி.சேடபட்டி கிராமம். இங்கு அரசு அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கருந்திரிகளை வீடுகளில் வைத்து தயாரிப்பதாக வச்சக்காரப்பட்டி

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அனுமதியின்றி வீடுகளில் கருந்திரிகளை தயாரித்த 4 பேரை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே உள்ளது டி.சேடபட்டி கிராமம். இங்கு அரசு அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கருந்திரிகளை வீடுகளில் வைத்து தயாரிப்பதாக வச்சக்காரப்பட்டி போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன் அடிப்படையில் குறிப்பிட்ட கிராமத்தில் சனிக்கிழமை மாலையில் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கருந்திரி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பரமசிவம்(40) என்பவரை பிடித்தனர். இதேபோல், இக்கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி(47), ராஜாக்கனி(46), போஸ்(51) ஆகியோரும் கருந்திரி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். உடனே இவர்கள் 4 பேரையும் வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

அதோடு, தாயராக வைத்திருந்த 102 கருந்திரி கட்டுக்கள் மற்றும் பசை பொருள்கள் ஆகியவைகளையும் பறிமுதல் செய்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT