முகப்பு
தற்போதைய செய்திகள்

சேத்தியாத்தோப்பு அருகே சோடா வியாபாரி கொலை

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே  பாளையங்கோட்டை கீழ்பாதியில் சோடா வியாபாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே  பாளையங்கோட்டை கீழ்பாதியில் சோடா வியாபாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கொலைச்சாவடி குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (52). சோடா வியாபாரியான இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பெயர் முத்தாயா. இவருக்கு ராஜதுரை என்ற மகன் உள்ளார். பாளையங்கோட்டை கீழ்பாதியைச் சேர்ந்த இரண்டாவது மனைவி பெயர் லலிதா. இவர்களுக்கு சூர்யா, கவிதா என்ற பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக லலிதா, குடும்பத்தினரை பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாக கீழ்பாதி சிவன்கோயில் தெருவில் கிருஷ்ணமூர்த்தியுடன் தனியாக குடும்பம் நடத்தி வருகிறார். அங்கு வீட்டிலேயே கிருஷ்ணமூர்த்தி சோடா கம்பெனி நடத்தி வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வீட்டு வாசலில் கிருஷ்ணமூர்த்தி வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சோழத்தரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுரேஷ்பாபு, ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சோழத்தரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.