ஜூன் 13-ல் நடராஜர் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சமயக்குரவர்கள் நால்வர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் குருபூஜை விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா வருகிற ஜூன் 13-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சமயக்குரவர்கள் நால்வர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் குருபூஜை விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா வருகிற ஜூன் 13-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
குருபூஜையை முன்னிட்டு கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும், திருஞானசம்பந்தர் வீதிஉலாவும் நடைபெறுகிறது. பின்னர் மாலை கோயில் நடனப்பந்தலில் குருபூஜை விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. உமாநாத தீட்சிதர் தலைமை வகிக்கிறார். சிதம்பரம் மெளனமட அதிபர் மெளனசுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார்.
நூல் வெளியீட்டு விழா: குருபூஜை விழாவில் திருவேட்களம் (தலவரலாறும்-பாடல்களும்) என்ற நூலை சு.திருநாவுக்கரசு பிள்ளை வெளியிட சக்தி நடராஜன் பெற்றுக் கொள்கிறார். திருஞானசம்பந்தர் அருள் வரலாறும், அருள் வாக்கும் என்ற நூலை ராமலிங்கம் செட்டியார் வெளியிட, ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் பெற்றுக் கொள்கிறார். தருமை ஆதீனப் புலவர் முனைவர் சிவச்சந்திரன் சிறப்புரையாற்றுகிறார்.