தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலைப் பேருந்தை சேதப்படுத்தியதாக 2 பேர் கைது

விருதுநகர் அருகே பட்டாசு ஆலைப்பேருந்தின் கண்ணாடியை உள்ளிட்டவைகளை உடைத்து சேதப்படுத்தியதாக தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலைப்பேருந்தின் கண்ணாடியை உள்ளிட்டவைகளை உடைத்து சேதப்படுத்தியதாக தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் மாரியப்பன்(45). இவர் செவலூர் தனியார் பட்டாசு ஆலையில் போர்மேனாக வேலை பார்த்து வருகிறார். இந்த ஆலையில் வெள்ளூரைச் சேர்ந்த முத்து என்பவரின் மனைவி ஜக்கம்மாள் வேலை பார்த்து வந்த நிலையில், ஏதோ காரணம் கூறி திடீரென வேலையை நிறுத்தி விட்டார்களாம். இதற்கு காரணம் போர்மேன் தான் என கணவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, திங்கள்கிழமை மாலையில் வழக்கம் போல் வேலையை முடித்துக் கொண்டு பட்டாசு ஆலை பேருந்தில் போர்மேன் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் சென்றனர்.

இந்த வெள்ளூர் அருகே வந்தபோது முன்விரோதத்தை மனதில் வைத்து முத்துவும், அவரது மகன் ஜெகதீசன்(22) ஆகியோரும் வழிமறித்து கட்டையால் கண்ணாடி மற்றும் கைப்பிடி கம்பிகளையும் அடித்து உடைத்துள்ளனர். இதில், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதப்படுத்தினார்களாம். அதோடு. போர்மேன் மாரியப்பனை பார்த்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பாக உடனே மாரியப்பன் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் முத்து,  அவரது மகன் ஜெகதீசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு பதிந்து போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT