மணப்பாறை அருகே இரு சக்கர வாகனத்தின் மீது வேன் மோதி விபத்து : 2 பேர் பலி
மணப்பாறை அருகே இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய வேன், இடித்த வேகத்தில் இரு சக்கர வாகனத்தை இழுத்துச் சென்று புளிய மரத்தில் மோதியது. இந்த பயங்கர விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

இரு சக்கர வாகனத்தில் மகனும், அப்பாவும் வந்து கொண்டிருந்த போது, திண்டுக்கல், வடமதுரையில் இருந்து பஞ்சாலைத் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரும், வேனில் வந்த ஒரு பெண்ணும் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லப்படுகின்றனர்.