கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் புழக்கத்தை தடுக்க அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது. சிறைக்காவலர்கள் கைதிகளின் அறைகளை சனிக்கிழமை சோதனை செய்தனர். 16வது
கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் புழக்கத்தை தடுக்க அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது. சிறைக்காவலர்கள் கைதிகளின் அறைகளை சனிக்கிழமை சோதனை செய்தனர். 16வது அறையில் சோதனை செய்தபோது அங்குள்ள கழிப்பறையின் பின்புறம் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சிறைக்காவலர்கள் கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அந்த செல்போன் தண்டனை கைதி சென்னை எழும்பூர் அன்னை சிவகாமிநகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்த தனசேகரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதுதொடர்பாக கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சிறை அதிகாரி சேகர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement