திருநெல்வேலி அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை
மானூர் அருகே உள்ள வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த சேது மகன் இசக்கிமுத்து (45). அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர், ராமையன்பட்டி ஊராட்சியின் 4-வது வார்டு உறுப்பினராக இருந்தார். இவர், தனது மனைவி
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே மர்மநபர்களால் அரிவாளால் ஞாயிற்றுக்கிழமை வெட்டப்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் திங்கள்கிழமை அதிகாலையில் உயிரிழந்தார்.
மானூர் அருகே உள்ள வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த சேது மகன் இசக்கிமுத்து (45). அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர், ராமையன்பட்டி ஊராட்சியின் 4-வது வார்டு உறுப்பினராக இருந்தார். இவர், தனது மனைவி சொர்ணமணியுடன் (40) பைக்கில் சிவாஜிநகர் பகுதியில் ஞாயி்ற்றுக்கிழமை சென்றபோது அரிவாளால் வெட்டப்பட்டார். தடுக்கமுயன்ற சொர்ணமணிக்கும் அரிவாள்வெட்டு விழுந்தது. காயமடைந்த இருவரையும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு திங்கள்கிழமை அதிகாலையில் இசக்கிமுத்து இறந்தார். இதுகுறித்து மானூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
இவ் வழக்கு தொடர்பாக 6 பேரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.