தற்போதைய செய்திகள்

இளைஞரை தாக்கி காயப்படுத்திய ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது

விருதுநகர் அருகே புல்லலக்க்கோட்டை கிராமம். இங்கு ஏற்கனவே இரு பிரிவினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் முத்துச்சாமி என்பவரின் மகன் சரவணக்குமார்(22). இவர் இப்பகுதியில்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை தாக்கி காயப்படுத்திய ராணுவ வீரர் உள்பட இரண்டு பேரை பாண்டியன் நகர் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே புல்லலக்க்கோட்டை கிராமம். இங்கு ஏற்கனவே இரு பிரிவினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் முத்துச்சாமி என்பவரின் மகன் சரவணக்குமார்(22). இவர் இப்பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை விருதுநகரில் பொருள்கள் வாங்கிக் கொண்டு புல்லலக்கோட்டைக்கு அவரது தோட்டத்திற்கு சென்றாராம். அப்போது, ஏற்கனவே உள்ள முன்விரோதத்தை மனதில் வைத்து இதே ஊரைச் சேர்ந்த நடுத்தெருவைச் சேர்ந்த ராணுவ வீரரான மாரியப்பயன்(32), குப்புசாமி உள்ளிடட 10 பேர் வழிமறித்து கத்தி, அரிவாள் மற்றும் கம்பாலும் தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த நிலையில் அலறல் சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் திரண்டு வருவதைப் பார்த்தவுடன் ராணுவ வீரர் தரப்பினர் தப்பியோடிவிட்டனர். இதில், மாணவர் பலத்த காயம் அடைந்தார்.

இது குறித்து விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் மாணவர் சரவணக்குமார் அளித்த புகாரின் பேரில் ராணுவவீரர் மாரியப்பன், ஆறுமுகம் ஆகியோரை போலீஸார் கைது செய்தும், 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதேபோல், ராணுவ வீரர் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சரவணக்குமார், பால்சாமி மற்றும் ராஜேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தை அடுத்து மேலும் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீஸார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT