முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆலங்குடி அருகே பூட்டியிருந்த வீட்டைத் திறந்து 11 பவுன் நகை திருட்டு

ஆலங்குடி அருகேயுள்ள  மழையூர் கிருஷ்ணம்பட்டியைச் சேர்ந்தவர் க.அஞ்ஜயன்(42).  இவர்   திங்கள்கிழமை தனது வீட்டைப் பூட்டிவிட்டு அருகிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு  மீண்டும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

ஆலங்குடி அருகே பூட்டியிருந்த வீட்டைத் திறந்து 11 பவுன் நகை,ரொக்கத்தை திருடியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆலங்குடி அருகேயுள்ள  மழையூர் கிருஷ்ணம்பட்டியைச் சேர்ந்தவர் க.அஞ்ஜயன்(42).  இவர்   திங்கள்கிழமை தனது வீட்டைப் பூட்டிவிட்டு அருகிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு  மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது இவரது  பூட்டிய வீட்டை கள்ளச்சாவி மூலம் திறந்து உள்ளே  சென்ற மர்மநபர்     அஞ்ஜயனைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டாராம்.

அதன்பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பெட்டியில் இருந்த 11 பவுன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தையும் திருடிச்சென்றது தெரியவந்தது.இது குறித்து மழையூர் போலீஸாரிடம் அஞ்ஜயன் அளித்த புகாரையடுத்து வீட்டில் திருடன் விட்டுச் சென்ற செல்போனை கைப்பற்றி மழையூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →