பழனியில் சுற்றித் திரிந்த 3 மாணவா்கள் மீட்பு
பழனி ஆர்.எப் ரோட்டில் சுற்றித் திரிந்த கோவையைச் சேர்ந்த 3 மாணவர்கள் மீட்கப் பட்டு, கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .
பழனி ஆர்.எப் ரோட்டில் சுற்றித் திரிந்த கோவையைச் சேர்ந்த 3 மாணவர்கள் மீட்கப்பட்டு, கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .
கோவை உக்கடம் பகுதியில் உள்ள டான்போஸ்கோ அன்பு இல்லத்தில் தங்கி பயின்று வரும் மாணவர்கள் நாகராஜன்(15), தமிழ்ச்செல்வன்(15), அழகா்சாமி(15).இவர்கள் இல்லத்தில் வேலை செய்ய பணித்ததால் அங்கிருந்து தப்பி பழனிக்கு வந்தனா். தப்பி வந்த 3 மாணவா்களும் செய்வது தெரியாமல் வியாழக்கிழமை ரயில்வே பீடா் ரோட்டில் நின்று தவித்துக் கொண்டிருப்பதை, பார்த்த கண்ணன் என்பவா் பழனி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததார்.இதையடுத்து காவல்துறையினா் மாணவா்களை மீட்டு, அறிவுரைகள் வழங்கி, மீண்டும் கோவை டான்போஸ்கோ அன்பு இல்லத்திற்கே காப்பாளர் பாலுச்சாமியுடன் பத்திரமாக அனுப்பி வைத்தனா்.