முகப்பு
தற்போதைய செய்திகள்

காட்டுமன்னார்கோயில் அருகே பேருந்து பயணியிடம் 25 பவுன் நகை திருட்டு

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள எள்ளேரியைச் சேர்ந்தவர் நஜிர்அகமது (58).  ஓய்வுபெற்ற சுகாதாரநலக்கல்வி அலுவலரான இவர் சென்னையில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே பேருந்து பயணியிடம் 25 பவுன் நகைகள் திருடு போனது.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள எள்ளேரியைச் சேர்ந்தவர் நஜிர்அகமது (58).  ஓய்வுபெற்ற சுகாதாரநலக்கல்வி அலுவலரான இவர் சென்னையில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் குடும்பத்துடன் சொந்த ஊரான எள்ளேரிக்கு வந்த இவர் சனிக்கிழமை சென்னைக்கு புறப்பட்டார். நஜீர்அகமது தனது மனைவி கெளசர்கான், மகன், மகள் ஆகியோருடன் எள்ளேரி பஸ்நிறுத்தத்தில் சிதம்பரம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால், நின்று கொண்டிருந்த இவர்கள் வீரநத்தம் கிராமம் அருகே இருக்கை கிடைத்ததும் அமர்ந்தனர். அப்போது தனது கைப்பையை பார்த்தபோது கைப்பையிலிருந்த 25 பவுன் நகைகள் காணாதது கண்டு அதிர்ச்சியுற்றனர். இதுகுறித்து நஜிர்அகமது குமராட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.