முகப்பு
தற்போதைய செய்திகள்

சாலை மறியல்: 9 பெண்கள் உள்பட 12 பேர் கைது

பண்ருட்டியில் நூர்முகமது அவுலியா தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு சொந்தமாக பனங்காட்டுதெரு அருகே சுமர் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் அருகே வசிக்கும் சிலர் இந்த இடத்தை ஆகிரமிப்பு செய்ததாக

Updated On : 23 ஜூன், 2014 at 3:06 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:10 AM

பண்ருட்டி-சென்னை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 12 பேரை போலீஸார் கைய்தனர்.

பண்ருட்டியில் நூர்முகமது அவுலியா தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு சொந்தமாக பனங்காட்டுதெரு அருகே சுமர் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் அருகே வசிக்கும் சிலர் இந்த இடத்தை ஆகிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.மீதம் உள்ள இடத்தில் முட்புதர்களாக கிடந்தன.இன்று வக்போர்ட் கண்காணிப்பாளர் லியாகத் அலி, ஆய்வாளர் அன்வர்ஜீன், தர்கா கமிட்டி தலைவர் தாஜீதின் ஆகியோர் முட்புதர் மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாவட்ட பிரதிநிதி முத்துகிருஷ்ணன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 9 பெண்கள் உட்பட 12 பேர் சென்னை சாலையில் ரயில்வே கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பண்ருட்டி போலீஸார் மறியலில் ஈடுபட்டிருந்த 9 பெண்கள் உள்பட 12 பேரை கைது செய்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.