முகப்பு
தற்போதைய செய்திகள்

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு

பழனி அருகே அமரபூண்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(52). அமரபூண்டி கூட்டுறவு பால் சொசைட்டி தலைவராக உள்ளார். சங்கத்தின் செயலாளர் குமாரசாமி.  திங்கள்கிழமை ராஜேந்திரனிடம் குமாரசாமி வெற்று

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

பழனி அருகே கூட்டுறவு பால் உற்பத்தியாள்கள் சங்கத்தில் ஏற்பட்ட மோதலில் சங்க தலைவர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பழனி அருகே அமரபூண்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(52). அமரபூண்டி கூட்டுறவு பால் சொசைட்டி தலைவராக உள்ளார். சங்கத்தின் செயலாளர் குமாரசாமி.  திங்கள்கிழமை ராஜேந்திரனிடம் குமாரசாமி வெற்று காசோலையில் கையெழுத்து கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ராஜேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ராமசாமி, சங்க நிர்வாகி குமாரசாமி ஆகியோர் ராஜேந்திரனை இரும்பு மூடியால் தாக்கி உள்ளனர். இதுதொடர்பாக ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ஆயக்குடி போலீசார் குமாரசாமி மற்றும் ராமசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் ராமசாமி சங்க கணக்கு வழக்குகளை கேட்டதால் தன்னை தலைவர் ராஜேந்திரன் தாக்கியதாக ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இவரது புகாரின் பேரிலும் போலீசார் ராஜேந்திரன் மற்றும் கருப்புச்சாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.