ஸ்ரீவிலி.யில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தலைவர் டாக்டர் எஸ்.ஆர்.ஸ்ரீகுமார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஆர்.முனியாண்டி வரவேற்றார்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவிலி.யில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தலைவர் டாக்டர் எஸ்.ஆர்.ஸ்ரீகுமார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஆர்.முனியாண்டி வரவேற்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தலைவர் டாக்டர் எஸ்.ஆர்.ஸ்ரீகுமார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஆர்.முனியாண்டி வரவேற்றார்.
2014-15-ம் ஆண்டிற்கான ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக கே.சக்திவேல், துணைத் தலைவராக ஆர்.பி.ரஞ்சித், செயலாளராக வி.ஆர்.எஸ்.செந்தில்கண்ணன், பொருளாளராக பி.கார்த்திக் ஆகியோர் பொறுப்பேற்றனர். இயக்குநர்களாக டி.ஏ.எஸ்.ராமஸ்வாமி, எஸ்.குணசேகரன், ஆர்.முனியாண்டி, எம்.குலாம் அஹமது ஸைல், வி.ராஜ்கண்ணன், வி.சங்கரநாராயணன், எஸ்.முரளி, கே.அரவிந்த், எஸ்.சிவகுருநாதன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு அரிமா மாவட்டம் 324 ஏ4-ன் பொறுப்பாளர் டாக்டர் ஜி.நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்துவைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால், மூன்று சக்கர வாகனங்கள், ஏழை மாணவர்கள் கல்வியைத் தொடர கல்வி உதவித் தொகை, வட்டாரப் பள்ளிகளில் அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் என பல்வேறு நலத்திட்ட உதவிதள் வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் கல்விக் குழுத் தலைவர் எஸ்.குணசேகரன், பொருளாளர் எம்.கே.முகமது மைதீன், அரிமா சங்கத்தின் கே.குமாரவேல், பி.ஆர்.ஸ்ரீரெங்கராஜா, ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளி தாளாளர் டி.ஏ.எஸ்.ராமஸ்வாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.