முகப்பு
தற்போதைய செய்திகள்

சட்ட விரோதமாக கருத்திரி தயாரித்த விபத்தில் 6 பேர் பலியான சம்பவம்: அ.தி.மு.க. கவுன்சிலர் நீதிமன்றத்தில் சரண்

விருதுநகர் அருகே சட்ட விரோதமாக கருந்திரி தயாரித்த கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்

தற்போதைய செய்திகள்

சட்ட விரோதமாக கருத்திரி தயாரித்த விபத்தில் 6 பேர் பலியான சம்பவம்: அ.தி.மு.க. கவுன்சிலர் நீதிமன்றத்தில் சரண்

விருதுநகர் அருகே சட்ட விரோதமாக கருந்திரி தயாரித்த கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

விருதுநகர் அருகே சட்ட விரோதமாக கருந்திரி தயாரித்த கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழு அ.தி.மு.க. உறுப்பினர் மீனாட்சிசுந்தரம் திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலிநாயக்கனூரைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன், மீனாட்சி சுந்தரம், ஆசீர்வாதம். இதில் மீனாட்சிசுந்தரம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழு 13-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினராக உள்ளார். இவர்கள் கம்மாபட்டியில் சட்ட விரோதமாக அருகருகே கூடாரம் அமைத்து பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை தயார் செய்து வந்தனர்.

இந்நிலையில் மீனாட்சிசுந்தரம் ஆலைக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பக்கத்தில் உள்ள ஐயப்பன் கூடாரத்தில் கருந்திரி தயாரிக்கும் பணி நடைபெற்றுள்ளது. அதில் தொழிலாளர்கள் கருந்திரிகளை உலர வைத்து பின்னர் மாலை நேரத்தில் துண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்களாம். அப்போது, இரும்புக் கத்தியால் கருந்திரிகளை வெட்டும் போது ஏற்பட்ட உராய்வினால் அங்கு தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அருகிலிருந்த மீனாட்சிசுந்தரம் கூடாரத்துக்கும் தீ பரவியது. தீப்பற்றியதில் கூடாரங்கள் எரிந்து தரை மட்டமாயின. இந்த தீவிபத்தில் சிக்கி கூடாரத்துக்குள் வேலை செய்து கொண்டிருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த அருமைதுரை (45) உடல் கருகி உயிரிழந்தார். மேலும், விபத்தில் வெடித்துச் சிதறிய கற்கள் காலனி குடியிருப்புகளில் வந்து விழுந்ததால், வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சின்ராஜ் மகள் காளீஸ்வரி (7), சந்தோஷம் மனைவி பொன்னம்மாள் (79) மற்றும் காளிமுத்து (13) ஆகியோர் படுகாயமடைந்து உயிரிழந்தனர். காயமுற்று சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த துரைராஜ் (45), சங்கரவேல் (42) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.இந்த விபத்தில் கூடாரத்தின் அருகே இருந்த 7 வீடுகள் சேதமடைந்தன.

இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆசீர்வாதத்தைக் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த  அ.தி.மு.க. விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழு 13-வது வார்டு உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல், நீதிபதி கவிதா முன்னிலையில் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →