முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூர் மாவட்ட தொழில் மையம் முன்பு உண்ணாவிரதம்: விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் முடிவு

செப்பு நகை உற்பத்தியாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் கலைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், அச்சங்க உறுப்பினர்களின் பங்குத் தொகை திருப்பிக் கொடுக்காததை கண்டித்து கடலூர் மாவட்ட

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:32 AM
பகிர்:

செப்பு நகை உற்பத்தியாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் கலைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், அச்சங்க உறுப்பினர்களின் பங்குத் தொகை திருப்பிக் கொடுக்காததை கண்டித்து கடலூர் மாவட்ட தொழில் மையம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டம் சிதம்பரம் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கே.சுந்தரேசன், ஆர்.பாவாடை பத்தர், எம்.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி துணைச் செயலாளர் எம்.சுரேஷ் வரவேற்றார். இளைஞரணி செயலாளர் எஸ்.ரமேஷ், தொழிற்சங்க செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், பொருளாளர் எஸ்.ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் மத்தியஅரசு ஜவுளித்துறை மூலம் கைவினை கலைஞர்களுக்கு அளிக்கப்படும் "ராஜீவ்காந்தி சில்பிஸ்த்வயா பீமாயோஜனா" மருத்துவக் காப்பீடு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் மத்தியஅரசு ஜவுளித்துறையை கோருவது, மேற்பட்ட திட்டத்திற்கு செலுத்த வேண்டிய உறுப்பினர் பங்குத் தொகையை தமிழகஅரசு செலுத்த வேண்டும், மாநில அரசை கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.