ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் பயின்ற 201 பேர் குரூப்-4 தேர்வில் வெற்றி
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 25.8.2013 அன்று இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரைவாளர் உள்ளிட்ட 5,566 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு
பழனி அருகே ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தில் பயின்ற 201 பேர் குரூப்-4 தேர்வி வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 25.8.2013 அன்று இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரைவாளர் உள்ளிட்ட 5,566 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியது. இதற்கான முடிவுகள் புதன்கிழமை மாலை 4 மணிக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதில் ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தில் பயின்ற 201 மாணவ, மாணவியர் வெற்றி பெற்று பணிநியமன வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 147 பேர் இளநிலை உதவியாளர் பணிக்கும், 54 பேர் தட்டச்சர் பணிக்கும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களில் 71 பேர் 240 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
இந்த முறை தேர்வு முடிவுகளில் புதியமாற்றம் செய்யப்பட்டு தேர்வு எழுதிய அனைவரது மதிப்பெண்களும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்வதற்கும், தங்களை மேலும் உயர்த்திக் கொள்வதற்கும் வழி செய்துள்ளது. 225 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளவர்கள் இளநிலை உதவியாளர் பணிக்கும், 195 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளவர்கள் தட்டச்சர் பணிக்கும் நியமனம் பெற வாய்ப்புள்ளது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மையத்தின் இயக்குனர் ராமமூர்த்தி, பயிற்றுனர்கள் முருகேசன், முத்துச்சாமி, கே.செல்வராஜ், செல்வராஜ், பூவராகவன், பெரியதுரை, ராமமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.