முகப்பு
தற்போதைய செய்திகள்

வத்திராயிருப்பில் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 7 மார்ச், 2014 at 10:58 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு மேலப்பாளையம், சுப்பராயர் தெருவைச் சேர்ந்தவர் பழனித்தேவர் மகன் காளியப்பன் (45). இவரிடம் இதே இடத்தைச் சேர்ந்த க.ஆறுமுகம் (40) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.50 மாமுல் கேட்டுள்ளார். தர மறுத்த ஆறுமுகத்தை தாக்க முயன்றுள்ளார்கள். அருகில் இருந்தவர்கள் பிடித்து ஆறுமுகத்தை வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காளியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.