தற்போதைய செய்திகள்

பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது வலசை கிராமத்தில்,  2500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவ் ஊராட்சியின் தலைவர் பதவி பொது பிரிவினருக்கு தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு

பெ. விஜயபாஸ்கர்

ஊராட்சி தலைவர் பதவியை ஆதிதிராவிட பிரிவினருக்கு  ஒதுக்ககோரி கிராம மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது வலசை கிராமத்தில்,  2500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவ் ஊராட்சியின் தலைவர் பதவி பொது பிரிவினருக்கு தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.ஆனால் இப்பதவியை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகளிடத்திலும் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க இக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கோரிக்கை குறித்த அறிவிப்பு தட்டிகளை கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT