தற்போதைய செய்திகள்

புதிய வாக்காளர் சேர்ப்பு படிவங்களை மொத்தமாக வழங்கக் கூடாது: ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பு படிவங்களை அரசியல் கட்சியினருக்கு மொத்தமாக வழங்கக் கூடாது என ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான டி.என்.ஹரிஹரன் வலியுறுத்தினார்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பு படிவங்களை அரசியல் கட்சியினருக்கு மொத்தமாக வழங்கக் கூடாது என ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான டி.என்.ஹரிஹரன் வலியுறுத்தினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்குச் சாவடி அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான டி.என்.ஹரிஹரன் பங்கேற்று பேசுகையில், மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி, வாக்காளர்கள் பெயர் பட்டியலில் தகுதியானவர்களை பெயர் சேர்க்கும் வகையில் சிறப்பு முகாம் (ஞாயிற்றுக்கிழமை) நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதில், 18 வயது பூர்த்தியானவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால், இவர்களுக்காக அந்தந்த பகுதி வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது. இதில், தகுதியான வாக்காளர்கள் பெயர் சேர்ப்பதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்கலாம். அதை உடனே வாக்குச்சாவடி அலுவலர்கள் சரிபார்த்துப் பெற்றுக் கொள்ளவேண்டும். குறிப்பாக வாக்காளர் சேர்க்கைக்கான படிவங்களை அரசியல் கட்சியினர் மற்றும் தனி நபருக்கோ  மொத்தமாக வநியோகம் செய்யக்கூடாது என தேர்தல் அலுவலர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.   

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, வருவாய் கோட்டாட்சியர் உதயகுமார், வட்டாட்சியர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் மண்டல வாக்குச் சாவடி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நடராஜன் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகை

நிலக்கரிச் சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிா்காலத்தை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி

அனில் அம்பானி வங்கிக் கணக்குகளை மோசடி என அறிவிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை: ரத்து செய்த உயா்நீதிமன்றம்

சிதம்பரம் நகராட்சியில் ரூ.400 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT