தற்போதைய செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்களின் மருத்துக்காப்பீட்டுத் திட்டத்தினை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவல் துறை நலச்சங்கத்தினர்

எஸ். பாண்டியன்

ஓய்வூதியர்களின் மருத்துக்காப்பீட்டுத் திட்டத்தினை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவல் துறை நலச்சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வுபெற்ற காவல் துறை நல சங்கத்தின் மாவட்ட செயலாளரும், முன்னாள் காவல் ஆய்வாளருமான மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முப்பிடாதி முன்னிலை வகித்தார்.

இதில், காவல் துறையில் பதவி உயர்வுக்கான உயர்நீதிமன்ற தீர்ப்பினை அரசு ஆணையாக வெளியிடவும், மாவட்டம் தோறும் மலிவு விலை அங்காடிகளை தொடங்கி, மலிவு விலை குடும்ப அட்டையினை வழங்கவம் மற்றும் ஓய்வுதியர்களுக்கு மருத்துவக்காப்பீட்டு திட்டத்தினை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, நிர்வாகிகள் குழுவினர் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று அளித்தனர்.

அதற்கு முன்னதாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகை

நிலக்கரிச் சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிா்காலத்தை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி

அனில் அம்பானி வங்கிக் கணக்குகளை மோசடி என அறிவிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை: ரத்து செய்த உயா்நீதிமன்றம்

சிதம்பரம் நகராட்சியில் ரூ.400 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT