தற்போதைய செய்திகள்

மதுரையில் பள்ளிவாசல் அருகே குண்டு வெடிப்பு

மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள சுங்கம் பள்ளிவாசல் முன்புநிறுத்தப்பட்டிருந்த பள்ளிவாசல் நிர்வாகியான காஜாமைதீன் என்பவரது இருசக்கரவாகனத்தின் அடிப்பகுதியில் பட்டாசு வெடிகுண்டு வெடித்தது.

ஜெயப்பாண்டி

மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள சுங்கம் பள்ளிவாசல் முன்புநிறுத்தப்பட்டிருந்த பள்ளிவாசல் நிர்வாகியான காஜாமைதீன் என்பவரது இருசக்கரவாகனத்தின் அடிப்பகுதியில் பட்டாசு வெடிகுண்டு வெடித்தது.

அங்கு சென்று பார்த்தபோது சணல் சுற்றிய பட்டசு துண்டுகள் வெடித்து சிதறியது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தி்ல் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.  கடந்த சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய வழக்கறிஞர் ஒருவரின் காருக்கு அடியில் இதுபோன்ற பட்டாசு குண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் அதிமுக இளைஞர் அணி நிர்வாகியின் வெங்காய மண்டி அருகே பட்டாசு குண்டு கண்டுபிடிக்கபட்ட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT