முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தமிழகஅரசு அறிவித்த பொங்கல் போனஸ் வழங்கப்படாததை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிதம்பரம் காந்திசிலை அருகே கண்டன

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தமிழகஅரசு அறிவித்த பொங்கல் போனஸ் வழங்கப்படாததை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிதம்பரம் காந்திசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகரத் தலைவர் ஆர்.திருமாறன் தலைமை வரித்தார். மாவட்ட வர்த்தக அணி பொதுச்செயலாளர் கே.ஜெயக்குமார், பொறியாளர் அணி தலைவர் வி.ஜெயகோபால், ஆடிட்டர் ஜி.விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வைரபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பொறுப்பாளர் பால.ரவி வரவேற்றார். கடலூர் மாவட்டத் தலைவர் ஜே.சுகுமாறன், மாவட்ட பொதுச் செயலாளர் துறைமுகம் செல்வம், மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம், விவசாய அணித் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், கலை-இலக்கிய அணித் தலைவர் கே.ஆர்.திருமேனி, மாநில பொதுக்குழு உறுப்பினப் நடனம்பிள்ளை உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பொதுச்செயலாளர் ஜி.வெங்கடேசன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, நீதிமன்றம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.