முகப்பு
தற்போதைய செய்திகள்

செங்குன்றம் அருகே அதிக கட்டணம் வசூலிப்பதாக பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை

இந்த பள்ளியில் கடந்த ஆண்டை(2012-2013)விட இந்த (2013-2014) ஆண்டு அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 300க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

செங்குன்றத்தை அடுத்த புழல் காந்தி தெரு அருகே தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் கடந்த ஆண்டை(2012-2013)விட இந்த (2013-2014) ஆண்டு அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 300க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீஸார் பள்ளி நிர்வாகத்திடமும் பெற்றோர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் முற்றுகையிட்ட பெற்றோர்கள் களைந்து சென்றனர். இதனால் 18ந்தேதி காலை அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →