மதுரையில் இருந்து தனியாக ரயிலில் வந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மயிலாடுதுறையில் மீட்பு
மதுரையில் இருந்து ரயிலில் வீட்டை விட்டு ஓடி தப்பி வந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மயிலாடுதுறையில் ரயில்வே போலீஸார் மீட்கப்பட்டனர்.
மதுரையில் இருந்து ரயிலில் வீட்டை விட்டு ஓடி தப்பி வந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மயிலாடுதுறையில் ரயில்வே போலீஸார் மீட்கப்பட்டனர்.
மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் சோதனை செய்த போது, மூவரையும் போலீஸார் பிடித்து வைத்தனர்.
மதுரை அண்ணா நகர், எஸ்.எம்.காலனியைச் சேர்ந்த சோலை என்பவர் மகன் குருபிரசாத் (13). இவர் சேதுபதி அரசுப் பள்ளியில் படிக்கிறார்.
மதுரை அண்ணாநகர் ஜீவா தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் மகன் முத்துக்குமார் (12). இவர், மங்கையர்க்கரசி மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார்.
அதே பள்ளியில் படிக்கும் எஸ்.எம்.காலனியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மகன் சேவாக் (11) இம்மூவரும் ராமேஸ்வரம் திருப்பதி ரயிலில் பயணித்துள்ளனர். அவர்கள் மூவர் மீதும் சந்தேகம் எழுந்ததால், மயிலாடுதுறையில் ரயில்வே போலீஸார் சோதனை மேற்கொண்டு, மூவரிடமும் விசாரித்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அவர்கள் அளித்ததால், மூவரையும் ரயிலில் இருந்து இறக்கி, அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். இவர்கள் மூவரும் காணவில்லை என்று திடீர் நகர் போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இவர்களின் பெற்றோர்கள் மயிலாடுதுறை வருகின்றனர். பின்னரே எந்த காரணத்துக்காக மூவரும் வீட்டை விட்டு வெளியில்வந்தனர் என்பது தெரியும்..