முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் ரூ.1.5 லட்சம் பறிமுதல்

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும்படையினர் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு

Updated On : 20 மார்ச், 2014 at 8:25 PM
பகிர்:

திருநெல்வேலியில் தகுந்த ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.1.5 லட்சத்தை தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும்படையினர் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி அபிஷேகபட்டியில் தேர்தல் கண்காணிப்புக் குழு அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் போலீஸாரும், அதிகாரிகளும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ் வழியாக வந்த ஒரு காரில் எவ்வித ஆவணங்களுமின்றி ரூ.1.5 லட்சம் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காரில் வந்த கேரள மாநிலம், ஏர்ணாகுளம் மாவட்டம், மூவாற்றுப்புழா பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் மேத்யூவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் பணத்தை பறிமுதல் செய்து திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.