பொதுக்கழிப்பறை, நாடக மேடை அமைக்கப்படும் : செந்தில்பாலாஜி தேர்தல் வாக்குறுதி
கரூர் ஒன்றியத்தில் உள்ள மரவாபாளையத்தில் பொதுக்கழிப்பறை மற்றும் நாடக மேடை அமைக்கப்படும் என்றார் போக்குவரத்து அமைச்சர் வி. செந்தில்பாலாஜி.
கரூர் ஒன்றியத்தில் உள்ள மரவாபாளையத்தில் பொதுக்கழிப்பறை மற்றும் நாடக மேடை அமைக்கப்படும் என்றார் போக்குவரத்து அமைச்சர் வி. செந்தில்பாலாஜி.
புதன்கிழமை இரவு கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது செந்தில் பாலாஜி பேசுகையில், மாற்றாந்தாய் மனப்பான்மையுடம் செயல்படும் காங்கிரஸ் அரசையும், அதற்கு துணை போன திமுகவையும் புறக்கணியுங்கள். மரவாபாளையத்தில் பொதுக்கழிப்பறை வசதி, நாடகமேடை அமைக்கப்படும் என உறுதி கூறுகிறேன். நெரூருக்கும், உன்னியூருக்கும் இடையே உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்றார்.
தொடர்ந்து வேட்பாளர் தம்பிதுரை பேசுகையில், கடந்த 17 வருடமாக காங்கிரசில் அங்கம் வகித்த திமுக, காவிரி நதிநீர் பிரச்னையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் ஜெயலலிதான் நீதிமன்றத்தை நாடி, அரசு இதழில் கொண்டுவரச் செய்தார். முதல்வரின் ஆட்சியில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முதன்மையான மாநிலமாக திகழ்வது போல, பாரத பிரதமரானால் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறும். ஜெயலலிதா பிரதமராக 40 தொகுதிகளையும் வெற்றியைக் கொடுங்கள் என்றார்.
Advertisement