முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பாஜகவின் 'ஒரு வோட்டு, ஒரு நோட்டு' நிகழ்ச்சி

அதன்படி ஒவ்வொரு வாக்காளரிடமும் நிதி பெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கோருவதோடு, மோடி பிரதமரானால் நாட்டுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்க வேண்டும். 'ஒரு

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:46 AM
பகிர்:

பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்காக நிதி திரட்டியும், கொள்கைகள் மக்களை சென்றடையும் விதத்திலும் 'ஒரு வோட்டு, ஒரு நோட்டு' என்ற திட்டத்தை அறிவித்தது.

அதன்படி ஒவ்வொரு வாக்காளரிடமும் நிதி பெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கோருவதோடு, மோடி பிரதமரானால் நாட்டுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்க வேண்டும். 'ஒரு வோட்டு, ஒரு நோட்டு' என்ற நிகழ்ச்சியை பாரதிய ஜனதா கட்சி செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வைரபிரகாஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகரத் தலைவர் ஆர்.திருமாறன், துணைத் தலைவர் ஜி.சிவனேசன், தேர்தல் பொறுப்பாளர் பால.ரவி, மாவட்ட வர்த்தக அணி பொதுச்செயலாளர் கே.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.