6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சிலை திருட்டு குற்றவாளி கைது
அரியலூர் மாவட்டம் உடையார்பளாயைத்தைச் சேர்ந்கத மணிகண்டன் (22). இவர் சிதம்பரம் அருகே தாலுக்கா காவல் நிலைய சரகத்தில் சிலை திருட்டு வழக்கில் கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு
கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சிலை திருட்டு வழக்கு குற்றவாளி ஒருவரை கடலூர் மாவட்ட தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பளாயைத்தைச் சேர்ந்கத மணிகண்டன் (22). இவர் சிதம்பரம் அருகே தாலுக்கா காவல் நிலைய சரகத்தில் சிலை திருட்டு வழக்கில் கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைக்கப்பட்டார். அதன் பின்னர் பெயிலில் வந்த மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.
தலைமறைவான மணிகண்டனை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா, தனிப்படை போலீஸாரிடம் உத்தரவிட்டார். அதன் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான கடலூர் மாவட்ட தனிப்படை போலீஸார், சிதம்பரம் அருகே ஆடூர் கிராமத்தில் தலைமறைவு குற்றவாளி மணிகண்டனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். பின்னர் மணிகண்டனை சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸார் ஒப்படைத்தனர்.