தற்போதைய செய்திகள்

மீனவர்களுக்கு துரோகம் இழைத்த ப.சிதம்பரம் ஓடி ஒளிகிறார்: பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார் மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஜெயப்பாண்டி

கன்னியாகுமரி செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார் மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

மதுரை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பொதுவாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதில்லை. அதனால் அவர் போட்டியிடாதது குறித்து கருத்து சொல்வதற்கில்லை. ஆனால், ப.சிதம்பரம் அப்படியில்லை. அவர் தமிழக மக்களுக்கு, குறிப்பாக மீனவர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். இதனால் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒளிந்துவருகிறார்.

பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நரேந்திர மோடி தமிழகத்தில் இரு முறை பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது என்றார்.

விமான நிலையத்தில் மதுரை மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவ.முத்துக்குமார் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT