போலீஸாரை தாக்கிய 5 பேர் கைது
நித்திரவிளை காவல் நிலைய தலைமை காவலர்கள் ஜோசப்ராஜ், சோமதாஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு வழக்கு விசாரணைக்காக விரிவிளை பகுதிக்குச் சென்றனர். காஞ்சாம்புறம் பகுதியில்
நித்திரவிளை அருகே போலீஸாரை தாக்கியதாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நித்திரவிளை காவல் நிலைய தலைமை காவலர்கள் ஜோசப்ராஜ், சோமதாஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு வழக்கு விசாரணைக்காக விரிவிளை பகுதிக்குச் சென்றனர். காஞ்சாம்புறம் பகுதியில் சென்றபோது, வேன் ஓட்டுநரிடம் 5 பேர் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது, 5 பேரும் சேர்ந்து போலீஸாரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த போலீஸார் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து காவலர் ஜோசப்ராஜ் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீஸார், இரயுமன்துறை பகுதியைச் சேர்ந்த கிளிண்டன் (24), மெர்லின் (30), ராபர்ட் (33), பனிதாஸ் (28), ராஜு (34) ஆகிய 5 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement