முகப்பு
தற்போதைய செய்திகள்

காட்டுமன்னார்கோயில் அருகே விவசாய கூலித்தொழிலாளர் அடித்து கொலை

காட்டுமன்னார்கோயில் அருகே குடிபோதையில் இருந்த விவசாய கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:08 AM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே குடிபோதையில் இருந்த விவசாய கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழஅதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மரியதாஸ் (48). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவியும், கணேசன் (24), விமல்ராஜ் (15), என்ற மகன்களும், பிரபாவதி (18) என்ற மகளும் உள்ளனர். கல்வி பயிலுவதற்காக மனைவி, மகன்கள், மகள் ஆகியோருடன்  ஆயங்குடியில் வசித்து வருகின்றார்.

இதனால் தாயுடன் வசித்து வரும் மரியதாஸ் வேலைக்கு சென்றுவிட்டு குடித்துவிட்டு வந்து வீட்டில் அமர்ந்து கொண்டு சத்தம் போட்டு பேசிக்கொண்டிருப்பார் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் மரியதாலிற்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுப்ரவேலுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

புதன்கிழமை இரவு மரியதாஸ் குடித்துவிட்டு வந்து சுப்ரவேலிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுப்ரவேல் கருங்கல்லால் மரியதாலை தலையில் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மரியதாஸை 108 ஆம்புலன்ஸ் மூலம் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது கொண்டு செல்லும் வழியிலேயே மரிதாஸ் இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப் பதிவு செய்து சுப்ரவேலை கைது செய்தனர். போலீஸார் விசாரணையில் மரியதாஸ் என்னை பார்த்து அசிங்கமான வார்த்தையால் திட்டியதால் கோபமடைந்து கருங்கல்லால் பின்தலையில் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments