தற்போதைய செய்திகள்

மதுரை : கோயில் உண்டியலை உடைக்க முயற்சி; காவலாளி பணி இடை நீக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான தென்திருவாலவாய நாதர் கோயிலில் நேற்று நள்ளிரவில் திருட்டு முயற்சி நடந்தது. இதனால்,

ஜெயப்பாண்டி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான தென்திருவாலவாய நாதர் கோயிலில் நேற்று நள்ளிரவில் திருட்டு முயற்சி நடந்தது. இதனால், பணியில் இல்லாமல் போன காவலாளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தென்திருவாலவாயநாதர் கோயில், மதுரை தெற்கு மாசி வீதயில் உள்ளது. தற்போது இந்த கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருக்கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளனர். அப்போது, அலார மணி ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

இதனால், கோயிலுக்கு அப்பகுதியினர் திரண்டு வந்தனர்.

காவலாளி ஆறுமுகம் என்பவர் ஏற்கனவே கோயில் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பணியில் இல்லாதததால் அவரை சஸ்பென்ட் செய்து கோயில் நிர்வாகி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT