சாலை விபத்தில் 6 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகன் பாஸ்கரன் (35). இவர் பிசியோதெரபி டாக்டர். அவரது மனைவி பாக்கியலட்சுமி (30), மாமனார் கிருஷ்ணமூர்த்தி (80), 7 மாத
மதுராந்தகம் நெடுஞ்சாலையில் லாரி, ஆம்னிபஸ் ஆகிய வாகனங்கள் மோதிய விபத்தில் காரில் பயணம் செய் 7 மாத பெண் குழந்தை உள்பட 6 பேர்கள் பலியானார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகன் பாஸ்கரன் (35). இவர் பிசியோதெரபி டாக்டர். அவரது மனைவி பாக்கியலட்சுமி (30), மாமனார் கிருஷ்ணமூர்த்தி (80), 7 மாத பெண்குழந்தை ஆர்ஷா மற்றும் அதேப்பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களான மகேஸ்வரன் (30), கார்த்திக்பாலாஜி (34) ஆகியோர் சென்னையில் திங்கட்கிழமை காலை நடைபெற இருந்த உறவினர் வீட்டு திருமணத்திற்காக, காரில் சென்னைக்கு சென்றார்கள். திருச்சி--சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் ஏரிக்கரை பக்கமாக கார் வந்தபொது காரின் முன்னே சென்ற ஆம்னி பஸ் திடீரென நின்றதால் பின்னால் வந்த கார் பேருந்தின் மீது மோதியது. இதனைத் தொடர்ந்து, காரின் பின்னால் வந்த சரக்கு லாரியும் காரின் மீது மோதியது. இரு வேறு வாகனங்களால் மோதிய இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர்களும் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள்.
உயிரிழந்தவர்களின் உடல்களை போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி விஜயகுமார், மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி ராஜேந்திரன், அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை செய்தனர். இதுகுறித்து மதுராந்தகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.