முகப்பு
தற்போதைய செய்திகள்

கரூர் காகித ஆலையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.37.88 லட்சம் மோசடி செய்தவர் கைது

கரூர் வெங்கமேடு எஸ்பி காலனியைச்சேர்ந்தவர் சுப்ரமணியன்(34). இவர் கரூரில் ஸ்ரீடிரேடர்ஸ் என்ற பெயரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாகவும், பண பரிவர்த்தனையும் செய்வதாகவும்

Updated On : 6 மே, 2014 at 3:32 PM
பகிர்:

கரூர் காகித ஆலையில் வேலை வாங்கித்தருவதாக 17 பேரிடம் ரூ.37.88 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

கரூர் வெங்கமேடு எஸ்பி காலனியைச்சேர்ந்தவர் சுப்ரமணியன்(34). இவர் கரூரில் ஸ்ரீடிரேடர்ஸ் என்ற பெயரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாகவும், பண பரிவர்த்தனையும் செய்வதாகவும், தனக்கு கரூர் புகளூரில் உள்ள டிஎன்பிஎல்(காகித ஆலை) ஆலையின் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் பலரைத் தெரியும் என்றும் கூறி, ஆலையில் வேலையும் வாங்கித்தர முடியும் என தனது நண்பர்கள், உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனை நம்பி 2002-2004 வரை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவத்திபாளையம் விஓசி வீதியைச்சேர்ந்த மகாதேவன் தனது மனைவி தனலட்சுமிக்கு ஆலையில் கிளார்க் வேலைக்கு ரூ.4.15 லட்சம், கரூர் வெறங்கமேட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையாளர் பணிக்கு ரூ.2 லட்சம், சேலம் மாவட்டம் தொளசம்பட்டியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி ரூ.2.76 லட்சம், குமாரபாளையம் சிஎன் பாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் உள்பட 17 பேர் மாரியப்பனிடம் ரூ.37.88 லட்சம் வரை கொடுத்துள்ளனர். ஆனால் யாருக்கும் அவர் வேலை வாங்கிக்கொடுக்கவில்லை.

இந்நிலையில் அவர் கடந்த ஒரு மாதமாக தலைமறைவானார். இதனால் அவர் மீது கடந்த 2-ம்தேதி பாதிக்கப்பட்ட 17 பேரும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.ஜோஷிநிர்மல்குமாரிடம், வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த மாரியப்பன் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி விஜயா, உறவினர்கள் சேகர், ஆறுமுகம் மற்றொருவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் இருந்து நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டுத்தரவேண்டும் என மனு கொடுத்தனர். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெபராஜ் வழக்குப்பதிந்து மாரியப்பன் உள்ளிட்ட 5 பேரையும் தேடி வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வீட்டில் பதுங்கியிருந்த மாரியப்பனை கைது செய்தார். மேலும் தலைமறைவான விஜயா உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகிறார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.