முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு
இதுதொடர்பாக அச்சங்கத்தின் கரூர் மாவட்டத்தலைவர் வி.கே.தங்கவேல் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறி வந்த கேரள அரசின் கபடத்தனம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் கரூர் மாவட்டத்தலைவர் வி.கே.தங்கவேல் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறி வந்த கேரள அரசின் கபடத்தனம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஏதோ தனக்கு மட்டுமே முல்லைப் பெரியாறு அணை சொந்தம் என எண்ணிக்கொண்டு இறுமாப்புடன் நீதிமன்றங்களுக்கு தாழ்பணியாமல் தனக்குத்தானே அணைப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றிய கேரள அரசுக்கு இது ஒரு சவுக்கடி. அணை பலமாக இருக்கிறது என தமிழக அரசு வாதிட்ட போதும், பலவீனமாக இருப்பதாக கூறி, இதுவரை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் தென்மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இனியாவது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, இறுமாப்பை கைவிட்டு, தமிழகத்தில் உள்ளவர்களும் விவசாய நண்பர்கள்தான் என நினைத்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு முன்வரவேண்டும்.
இதுமட்டும் தமிழக விவசாயிகளுக்கு தீர்வாகிட முடியாது. நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் தேசியமயமாக்கி இணைக்க வேண்டும். ஒரிஷா மாநிலத்தில் உள்ள மகாநதியில் வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. நதிகள் இணைக்கப்பட்டால், தமிழகத்தில் கோடை காலம் கூட வசந்த காலம் போல இருக்கும். தற்போது போதிய மழைநீர் கிடைக்காததால் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாய உற்பத்தி இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் முன்னேறும். எனவே நாட்டின் பொருளாôதாரம் காக்கப்பட வேண்டும் என்றால், நதிகள் இணைக்கப்பட வேண்டும். அதற்கு உறுதியான சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.
Advertisement