முகப்பு
தற்போதைய செய்திகள்

கால்நடை துறையில் போலி உத்தரவு மூலம் வேலைக்கு சேர்ந்த உதவியாளர் மீது வழக்கு

விருதுநகர் அருகே போலியான அரசு உத்தரவு தயாரித்து கால்நடை மருந்தகத்தில் உதவியாளராக பணிக்குச் சேர்ந்ததாக அந்த துறையின் உயர் அதிகாரி சூலக்கரை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்தார்.

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:42 AM

விருதுநகர் அருகே போலியான அரசு உத்தரவு தயாரித்து கால்நடை மருந்தகத்தில் உதவியாளராக பணிக்குச் சேர்ந்ததாக அந்த துறையின் உயர் அதிகாரி சூலக்கரை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்தார்.

விருதுநகர் அருகே செவல்பட்டியைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் ரவி. தற்போது இவர் எரிச்சநத்தம் அருகே உள்ள குமிழங்குளத்தில் கால்நடை மருந்தகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் போலியான அரசு உத்தரவு மூலம் பணிக்குச் சேர்ந்துள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் சஞ்சீவிராஜூக்கு புகார் வந்தது. இது தொடர்பாக கால்நடைத் துறையின் உயர் அதிகாரிகளிடம் விசாரணை செய்தார். அப்போது, இவர் சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ஆணையர் அலுவலகத்தின் மூலம் கடந்த 8.5.2012 அன்று அனுப்பியது போல் போலியாக உத்தரவு ஆணை தயாரித்து மோசடி செய்து உதவியாளர் பணிக்குச் சேர்ந்துள்ளது தெரிய வந்தது. உடனே இது குறித்து கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் சஞ்சீவிராஜ் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ரவி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.