முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில்  கிழக்கு காவல் நிலைய புதிய கட்டடத்துக்கு நகராட்சி நிர்வாகம் இடம் வழங்க வேண்டும்

இது தொடர்பாக உள்துறை அரசு செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோருக்கு, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி அனுப்பியுள்ள

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:42 AM

விருதுநகரில் கிழக்கு காவல் நிலையத்துக்கு புதிதாக கட்டடம் அமைக்க நகராட்சிக்கு சொந்தமான இடத்தை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக உள்துறை அரசு செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோருக்கு, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் நகராட்சி பகுதியில் வாடகை கட்டடத்தில் கிழக்கு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. வாடகை கட்டடத்தில் அடிப்படை வசதியின்றி செயல்படும் காவல் நிலையங்களுக்கு சொந்த கட்டடம் அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் இக்காவல் நிலையத்திற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரியவருகிறது.

     காவல் நிலையத்திற்கு அருகிலேயே கல்லூரி சாலையில் பொது பயன்பாட்டிற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் காவல் நிலையத்திற்கு குறிப்பிட்ட இடத்தை கொடுக்க நகராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இங்கு அமைக்க  நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.37 லட்சம் பணம் செலுத்தினால் இடம் ஒதுக்குவதாக கூறி மறுத்து வருகின்றனர். இப்பகுதிகளைச் சுற்றிலும் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு தலைமை மருத்துவமனை, பல்வேறு அரசு தனியார் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வாழும் பகுதியாக இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும். இந்நிலையில் வெளிப்பகுதிக்கு கொண்டு செல்வதற்கு முயற்சிக்கப்படுகிறது. 

Advertisement

    அதனால் காவல் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவே ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்க வேண்டும். இதே இடத்தில் தியாகி சங்கரலிங்கனாருக்கு மணிமண்டபம் அமைக்க எவ்வகையில் இடம் வழங்கப்பட்டதோ, அதேபோல் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு அனுப்பிய மனுவில் நகராட்சி துணைத் தலைவர் பாலகிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.           

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.