முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 7-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 7-ம் வகுப்பு மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:12 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 7-ம் வகுப்பு மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள டி.மானகசேகரி, கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பி.சூரியநாராயணன் (43). இவரது மகன் சிவசக்கரவர்த்தி (12). இவர் டி.மானகசேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். வியாழக்கிழமை மதியம் மேலும் ஒரு பையனுடன், டி.மானகசேரிக்கு கிழக்கேயுள்ள முத்துக்காளைத் தேவர் என்பவருக்குச் சொந்தமான கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கால் தவறி சிவசக்கரவர்த்தி கிணற்றில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தார்.

இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் சூரியநாராயணன் கொடுத்து புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →